Wednesday, October 6, 2010

எங்கள் தந்தையின் செவிகளுக்கு எங்கள் இதயஒலிகளை சமர்ப்பிக்கின்றேன்

MY FATHER-IN-LAW : Rev.John Thangaraj passed away on 08/07/10 I dedicated this poem  to him at his  Memorial service on 07/08/10
நீ மரண வேதனைப் படும் சில மணித்துளிகள் நாங்கள்
உன் அருகில் இல்லா நிலைகண்டு மனம் பதைக்கிறது !
தாங்கொண்ணா துயரத்தில் துடிக்கிறது ! அவ்வினாடி
பார்த்திருந்தால் அன்று முதல் தூக்கத்தைமறந்து இருப்போம்
என்றெண்ணியோ வரும் முன் நீ நீண்ட உறக்கம் கொண்டாய் !
ஒருவேளை நாங்கள் அருகில் இருந்திருந்தால் இறைவனிடம்
மண்டியிட்டு வேண்டி இருப்போம் நாங்கள் உள்ளவரை நீ
எங்களோடு வாழ வேண்டுமென்று - நலம்
பெற்று திரும்பி இல்லம் வருவாய் என்று உன் இல்லாளும்
நீ பெற்ற பிள்ளைகளும் விரும்பி நின்றோம் -ஆனால்
நீயோ மூன்றே தினமதில் எண்ணிப்பார்க்க முடியா
இடத்திற்கு எங்களை விட்டுச் சென்றாய் !
அனைவரையும் மீளா துயரத்தில் இட்டுச் சென்றாய் !
நான் பிறந்தபொழுது நீ என் தாத்தாவானாய்
உன் மகனை மணந்தபொழுது நீ என் தந்தையானாய்
என் பிள்ளைகள் வளர்ந்தபின்போ - மாலையில்
வீடு வரும் தாயின் கரம் உள்ள பண்டத்திற்கு
ஏங்கி நிற்கும் என் சேயானாய்-ஏனோ எங்கள் உள்ளம்
உனக்கு விடைகொடுக்க மறுக்கிறது - இருப்பினும்,
நீ நடந்து சென்ற பாதையை திரும்பி பார்க்கின்றோம்
நீ விட்டுச்சென்ற காரியங்களை தொடர நினைக்கின்றோம்
அதை செவ்வனே செய்ய இறைவனை வேண்டி நிற்கின்றோம் !

உன்னைப்பிரிந்த நினைவு இல்லா அத்தருணத்தை - மக்கள்
பிணம் என்றே எங்களை அழைத்திடுவர் ஆனால் நாங்களோ
அச்சமயத்தில் உன்னோடு சேர்ந்து நித்திய வாழ்வின் மகிமையைப்
பெற்றவர்களாய் இறைவனோடு களித்திருப்போம் என்று பதிவுசெய்து
அதுவரையில் அமைதிகாண அனைகட்டுகின்றேன் எங்கள் இதய ஒலிகளுக்கு...அன்பின் சாந்தி ...

இறைவனுக்கு விண்ணப்பம்